Sunday, May 18, 2025

8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம் - எலான் மஸ்க் நம்பிக்கை!

Elon Musk SpaceX World
By Jiyath a year ago
Report

இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ஷிப்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.

8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம் - எலான் மஸ்க் நம்பிக்கை! | Elon Musk Talks About Space X Attempt 3Rd Time

இந்த ராக்கெட்டுக்கு 'ஸ்டார்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறால் ராக்கெட் வெடித்து சிதறியது. பின்னர் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது.

நம்பிக்கை

அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது. இந்நிலையில் இந்த ராக்கெட்டின் மூன்றாவது சோதனை முயற்சி அடுத்த மாதமான பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம் - எலான் மஸ்க் நம்பிக்கை! | Elon Musk Talks About Space X Attempt 3Rd Time

அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்ஏஏ) அனுமதி அளித்ததும் ராக்கெட் ஏவப்படும். இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில் "இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம்.

நிலவுக்கும் மனிதர்களை அனுப்பியிருப்போம். செவ்வாய்க் கிரகத்தில் வாழ நிறைய வேலைகள் இருக்கிறது. மூன்றாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை இந்த ஆண்டு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.