இனிமே அரசியலுக்கு வர்றவங்களுக்கு வயசு முக்கியம் : அமெரிக்க அரசியலை சீண்டும் எலன் மஸ்க்

elonmusk ageof70
By Irumporai Dec 05, 2021 11:20 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

70 வயதுக்கு மேற்பட்ட எவரும் அரசியல் பதவிக்கு போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என்று SpaceX மற்றும் Tesla நிறுவனர் எலன் மாஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்க கோடீஸ்வரர்களில் பிரபலமான ஒருவரான எலன் மாஸ்க் தனது ட்விட்டர் பதிவில் :

முதலில் அரசியல் வருபவர்களுக்கு வயதினை நிர்ணயிக்கவேண்டும், ஒரு வேளை 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் , அரசியலில் போட்டியிடுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே எலன் மஸ்க் ஐநாவின் World Food Programme எனப்படும் வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு அமைப்பின் தலைவர் டேவிட் பெஸ்லி எலான் மஸ்கிற்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார்.

அதில், எலான் நினைத்தால் உலக வறுமையை எளிதாக போக்க முடியும். அவரின் 2% சதவிகித சொத்து இதற்கு போதும். உலகின் பட்டினியை எலான் வெறும் 6 பில்லியன் டாலர் கொடுத்து சரி செய்ய முடியும் என கூறினார்.

அதற்கு பதில் கூறிய எலன் மஸ்க் , வெறும் 6 பில்லியன் டாலரை வைத்து ஐநாவின் World Food Programme எப்படி பட்டினியை ஒழிக்கும் என்று விளக்கம் அளிக்கட்டும். நான் உடனே என்னுடைய டெஸ்லா பங்குகளை விற்று உங்களுக்கு பணம் தருகிறேன்.

ஆனால் இதற்கான கணக்கு வழக்கு வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் எல்லோரும் கணக்கு வழக்குகளை பார்க்கக் முடியும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.