ட்விட்டரால் எலான் மஸ்கிற்கு வந்த சோதனை : முக்கிய நிறுவனத்தின் பங்குகளை இழந்தார்

Twitter Elon Musk
By Irumporai Nov 09, 2022 04:26 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

டெஸ்லா பங்குகளை ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பகுதிக்கு பணத்தை திரட்ட எலான் மஸ்க், சுமார் $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் பங்குகளை விற்றதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

 எலான் மஸ்க் 

   டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மின்சார கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்,

ட்விட்டரால் எலான் மஸ்கிற்கு வந்த சோதனை : முக்கிய நிறுவனத்தின் பங்குகளை இழந்தார் | Elon Musk Sells Nearly 4 Billion In Tesla Stock

பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார், குறிப்பாக ட்விட்டரில் உள்ள ஊழியர்கள் பலரை பதவியை விட்டு நீக்கினார். மேலும் ட்விட்டரிக் ப்ளுடிக் பெற மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பினார் .

பங்குகளை விற்ற எலான் மஸ்க்

இந்த நிலையில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளது சரவதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.