எக்ஸ் தளத்தில் Hastag பயன்படுத்த வேண்டாம் - எலான் மஸ்க் சொன்ன காரணம்

Elon Musk X Social Media
By Karthikraja Dec 18, 2024 02:15 PM GMT
Report

 எக்ஸ் தளத்தில் Hastag பயன்படுத்த வேண்டாம் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்

உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் Tesla, SpaceX, Starlink, உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

elon musk about hastag in x

எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் டிவிட்டர்(Twitter) சமூக வலைத்தளத்தை 55 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு (இந்திய மதிப்பில் 3.75 லட்சம் கோடி) விலைக்கு வாங்கினார்.

எக்ஸ்(X)

அதன் பின்னர் டிவிட்டரை எக்ஸ்(X) என பெயர் மாற்றியதுடன் பல்வேறு உயர்மட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன் எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார். கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் ப்ளூடிக் பெறலாம் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். 

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் GROK என்ற ChatGPTயை அறிமுகப்படுத்தினார். இதில் பயனர் ஒருவர், நான் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக்கை பயன்படுத்தலாமா என GROKகிடம் கேள்வி கேட்டு அந்த பதிலை பதிவிட்டிருந்தார்.

Hastag

அந்த பதிவை பகிர்ந்த எலான் மஸ்க், Hastag பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அது பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. இதற்கு மேலும் அது தேவை இல்லை என கூறியுள்ளார். 

எக்ஸ் தளத்தில் Hastag டிரெண்டிங்க்கு முக்கிய பங்கு வகிப்பதோடு, ஒரு விஷயத்தை எளிதாக தேடவும் பயன்பட்டு வந்தது. எனவே Hastag க்கு மாற்றாக எலான் மஸ்க் வேறு ஒன்றை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளதால் இவ்வாறு கூறியிருக்கலாம் என டெக் வல்லுநர்கள் யூகிக்கின்றனர்.