"என்ன துப்பாக்கிமுனையில் நிக்க வைக்குற வரைக்கும் இதை செய்ய மாட்டேன்” - எலன் மஸ்க் அதிரடி

starlinkserviceukraine elonmusktweetgunpoint blockrussiannewssource
By Swetha Subash Mar 06, 2022 08:35 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

ரஷ்ய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனத்திடம் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 11 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 11 நாளில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி உக்ரைனை உருக்குலைய வைத்து வருகிறது ரஷ்யா.

"என்ன துப்பாக்கிமுனையில் நிக்க வைக்குற வரைக்கும் இதை செய்ய மாட்டேன்” - எலன் மஸ்க் அதிரடி | Elon Musk Says No To Hacking Russian News Sources

இந்த நிலையில் , ரஷ்ய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனத்திடம் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எலன் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் :


ரஷ்ய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனத்திடம் பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.

ஆனால், துப்பாக்கிமுனையில் நிறுத்தி அப்படி செய்ய சொல்லும் வரை முடக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும்  ஒரு சுதந்திரமான பேச்சுரிமைவாதியாக இருப்பதற்கு மன்னிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.

சைபர் பாதுகாப்பு, சிக்னல் முடக்கத்தை தாண்டி இணைய சேவை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துவருகிறோம் என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

"என்ன துப்பாக்கிமுனையில் நிக்க வைக்குற வரைக்கும் இதை செய்ய மாட்டேன்” - எலன் மஸ்க் அதிரடி | Elon Musk Says No To Hacking Russian News Sources

ஏற்கனவே உக்ரைனில் ஸ்டார்லிங் இணைய சேவை மட்டுமே வழங்கப்பட்டுவரும் நிலையில், அதனை ரஷ்ய அரசு குறி வைத்து முடக்க அதிக வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.