ஆனாலும் எலன் மாஸ்க்கு ரொம்ப குசும்புதான் : அமேசான் ஓனருக்கு பார்சல் அனுப்பிய எலான்

elonmusk silvermedal richestperson
By Irumporai Sep 30, 2021 09:45 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், அமேசான் நிறுவனருக்கு பார்சல் அனுப்பவிருக்கும் செய்தி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார் டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க். அவரைத் தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக பணக்காரர்கள் வரிசையில் ஜெஃப் பெஸோஸ் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது டெஸ்லா பங்குகளின் விலை உயர்வால் எலான் மஸ்க் 20 ஆயிரம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆனாலும் எலன் மாஸ்க்கு ரொம்ப குசும்புதான் : அமேசான் ஓனருக்கு  பார்சல் அனுப்பிய எலான் | Elon Musk Richest Person Jeff Bezos A Silver Medal

அதோடு, ஜெஃப் பெஸோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் இருவருக்கும் இடையே பணக்காரர் பட்டியல் மட்டுமல்லாது விண்வெளி திட்டங்கள், தானியங்கி கார் உற்பத்தி போன்ற துறைகளில் கடும் போட்டி இருந்து வருகிறது.

இதுகுறித்து செய்து வெளியிட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு வந்த சந்தோசத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்ஸுடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவருக்கு மின்னஞ்சலில், வெள்ளிப் பதக்கத்துடன், 2-வது நம்பரை குறிப்பிடும் வடிவத்தில் மிகப்பெரிய 'நம்பர்-2' என்ற சிலையை அனுப்பி இருப்பதாக செய்து வெளியிட்டுள்ளது.