உங்களுக்கு தான் அது ரகசியம்; எனக்கில்லை.. 12வது குழந்தை குறித்து எலான் மஸ்க்!

Elon Musk
By Sumathi Jun 26, 2024 11:27 AM GMT
Report

12ஆவது குழந்தை குறித்து எலான் மஸ்க் முதல்முறையாக பேசியுள்ளார்.

எலான் மஸ்க்

டெஸ்லா, எக்ஸ் நிறுவனங்களின் ஓனரான எலான் மஸ்க் நவீன தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது, குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறி கவலை தெரிவித்து வந்தார்.

elon musk

மஸ்க் ஜஸ்டின் வில்சன் என்பவரை முதலில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு பிறந்த குழந்தை இறந்துவிட்டது. 2004 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின் செயற்கை கருத்தரிப்பு மூலம் 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன.

எங்கள் நிறுவனத்தில் ஐபோன் தடை - காரணம் சொன்ன எலான் மஸ்க்

எங்கள் நிறுவனத்தில் ஐபோன் தடை - காரணம் சொன்ன எலான் மஸ்க்

 

12ஆவது குழந்தை

2008ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதனையடுத்து Riley என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த Grimes என்பவருடன் Relationship-ல் இருந்தார். அதன்மூலம், 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.

உங்களுக்கு தான் அது ரகசியம்; எனக்கில்லை.. 12வது குழந்தை குறித்து எலான் மஸ்க்! | Elon Musk Revealed Truth About 12Th Baby

மேலும், தனது Neuralink Executive Shivon Zilis மூலம் இரட்டை குழந்தைக்கு தந்தையானார். தற்போது 3வது குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மஸ்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், உங்களுக்குதான் அது ரகசியம்.

எனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் அது ஏற்கனவே தெரியும் எனத் தெரிவித்துள்ளார். மக்கள்தொகை சமநிலை நீடிக்க, ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக 2.1 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என மஸ்க் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.