இந்த விசயத்தில் அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட் - புகழ்ந்து தள்ளும் எலான் மஸ்க்
இந்தியாவின் தேர்தல் முறையை அமெரிக்காவுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
இந்திய தேர்தல்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற சமயத்தில், ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பேசியது இந்திய அரசியலில் புயலை கிளப்பியது.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை என கூறி வருகின்றனர். இவிஎம் இயந்திரத்திற்கு எதிரான எலான் மஸ்க்கின் இந்த கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
எலான் மஸ்க்
இந்நிலையில் தற்போது இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டி எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று மஹராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்னிக்கை நடைபெற்றது.
இதை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், கலிஃபோர்னியாவில் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க தேர்தல்
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று அதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.
India counted 640 million votes in 1 day.
— Elon Musk (@elonmusk) November 24, 2024
California is still counting votes 🤦♂️ https://t.co/ai8JmWxas6
இந்நிலையில் அப்போது நடைபெற்ற செனட் தேர்தலின் வாக்குகள் பல மாகாணங்களில் எண்ணி முடிக்கப்பட்டும், கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒரு வாரம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் பெரும்பாலோனோர் ஈமெயில் மூலம் வாக்களித்துள்ளனர். அந்த வாக்குகளை அவர் தான் அளித்தாரா என சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.