ஜிமெயிலுக்கு போட்டியாக XMail - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
X Mail என்ற பெயரில் புதிய ஈமெயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் தொடங்கும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி வருகிறார்.
டெஸ்லா என்ற பெயரில் கார் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இவர், டிரைவர் இல்லாமல் செல்லும் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தினார்.
X Mail
Starlink என்ற பெயரில் நேரடியாக செயற்கைகோள் மூலம் இணைய சேவையை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், விண்வெளிக்கு ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை அனுப்புவது போன்ற பணிகளை செய்யும் SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே.
இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர்(Twitter) சமூக வலைத்தளத்தை விலைக்கு வாங்கி எக்ஸ்(X) என பெயரிட்டார். இந்நிலையில் புதிதாக X Mail அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Yeah. On the list of things to do.
— Elon Musk (@elonmusk) December 15, 2024
தற்போது உலகில் பெரும்பாலானோர் ஜிமெயில் மற்றும் ஆப்பிள் மெயில் பயன்படுத்தி வரும் நிலையில் எலான் மஸ்க்கின் XMail எதிர்காலத்தில் கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.