எலான் மஸ்க்கையே அலரவிட்ட 19 வயது இளைஞன் - அப்படி என்ன செய்தார் தெரியுமா?
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் ஸ்வீனி என்ற 19 வயது இளைஞர் எலான் மஸ்க் ஜெட் என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வருகிறார்.
ட்விட்டர் பக்கத்தில் சுமார் 72 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்திருக்கிறார் எலான் மஸ்க்.
மேலும் தன் சமூக வலைத்தளங்களில் தன் ஃபாலோவர்களுடன் சரளமாக உரையாடும் ஒரு சில பில்லியனர்களுள் எலான் மஸ்க்கும் முக்கியம் வாய்ந்த ஒருவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் ஸ்வீனி என்ற 19 வயது இளைஞர் எலான் மஸ்க் ஜெட் என்ற ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வருகிறார்.
சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்யும் இந்த ட்விட்டர் பக்கம் தான் தற்போது எலான் மஸ்குக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
போட் என்ற ஆடோமேட்டிக் சாப்ட்வேர் மூலம் இந்த ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கின் பயண விவரங்களை அசால்டாக பதிவிடுகிறார் அந்த இளைஞர்.
எலான் மஸ்க் இந்த விமானத்தில் புறப்படுகிறார், எவ்வளவு நேரம் பயணம், எத்தனை மணிக்கு தரை இறங்குவார் என அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் குறிப்பிடுகிறார்.
எலான், குறிப்பிட்ட தகவல்களை டெலிட் செய்யுமாறும், 5000 டாலர்கள் தருவதாகவும் அந்த இளைஞரிடம் பேசியபோது தனக்கு 50 ஆயிரம் டாலர்கள் வேண்டுமென்று பேரம் பேசியுள்ளார் ஜேக்.
இதனால் கடுப்பான எலான், ஜேக்கை அனைத்து சோஷியல் மீடியாவிலும் ப்ளாக் செய்துவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்.
இத்தோடு நிறுத்தாமல் மைக்ரோசாஃப்ட் ஓனர், அமேசான் ஓனர் என அனைவரையும் இனி பின் தொடர்வேன் என்றும் அதன் மூலம் காசு பார்ப்பேன் என்று கூறும் ஜேக்,
இந்த பணத்தை வைத்து கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவேன், யாருக்கேனும் உதவி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.