‘‘என் வழி தனி வழி ’’ எலான் மஸ்க் வாங்கிய சொகுசு விமானம் : விலை இவ்வுளவு கோடியா?
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக எலான் மஸ்க் ரூ 646 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க்
கடந்த சில மாதங்களாகவே கூகுளில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்தான் எலான் மஸ்க் , ட்விட்டரின் தற்போதைய தலமை செயல் அதிகாரி , டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் .

தனி செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி நாசாவுக்கே டஃப் கொடுத்தவர்தான் எலான் மஸ்க் , எப்போதுமே தான் செய்யும் விஷயங்களில் பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி தனித்துவமாக தெரிபவர் தான் எலான் மஸ்க்.
சொகுசு விமானம்
இந்த நிலையில் தற்போது ஜி 700 என்ற புதிய சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார் , 57 அடி நீளமுள்ள இந்த விமானம் , பல நவீன வசதிகளை கொண்டது , அதே சமயம் 7500 கடல் மைல் தொலைவினை ஓய்வே இல்லாமல் பறக்கு திறன் கொண்டது.

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த ஜி 700 விமானம் அடுத்த ஆண்டு எலான் மஸ்கின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்தை பிரபல அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது .
மேலும், சொகுசு விமானத்தில் இராண்டு ரோல்ஸ் ராய்ஸ் என் ஜின்களும் விமானத்தில் வை பை வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.