X தளத்தை விற்றார் எலோன் மஸ்க்! எத்தனை லட்சம் கோடி?
எலான் மஸ்க் தனது சமூக ஊடகமான x தளத்தை தனது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI-க்கு சுமார் 33 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் அறிவிப்பு
செயற்கை நுண்ணறிவை சமூக வலைப்பின்னலுடன் இணைக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையில், எலோன் மஸ்க் தனது AI ஸ்டார்ட்அப் xAI ஐ தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) உடன் வெள்ளிக்கிழமை இணைப்பதாக அறிவித்தார்.
அனைத்து பங்கு பரிவர்த்தனைகளும் உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், 12 பில்லியன் டொலர் கடனை உள்ளடக்கிய எக்ஸ்-ன் மதிப்பை 33 பில்லியன் டொலர்களாகவும், xAI இன் மதிப்பை 80 பில்லியன் டொலர்களாகவும் நிர்ணயிக்கிறது.
x-யில் மஸ்க் வெளியிட்ட ஒரு பதிவில், இந்த இணைப்பின் மூலோபாய காரணத்தை எடுத்துரைத்தார்.
அதில், "xAI இன் மேம்பட்ட AI திறன் மற்றும் நிபுணத்துவத்தை எக்ஸ்-ன் பரந்த அணுகலுடன் இணைப்பதன் மூலம் இது மிகப்பெரிய செயல் திறனை திறக்கும்" என தெரிவித்துள்ளார்.
600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட எக்ஸ் மற்றும் xAI ஆகிய இரண்டு நிறுவனங்களின் எதிர்காலமும் பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் "இன்று, தரவு, மாதிரிகள், கணக்கீடு, விநியோகம் மற்றும் திறமை ஆகியவற்றை இணைக்கும் நடவடிக்கையை நாங்கள் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்கிறோம்," என்று மஸ்க் அறிவித்தார்.
44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 44 பில்லியன் டொலர்களுக்கு ட்விட்டரை வாங்கினார்.
பின்னர் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த எலான் மஸ்க் ட்விட்டரை "எக்ஸ்" என பெயர் மாற்றம் செய்தார்.
இதையடுத்து அவர் அடுத்த ஆண்டு அவர் xAI ஐ தொடங்கியதோடு, AI முயற்சியின் கணக்கீட்டு திறன்களை வலுப்படுத்த உயர் செயல்திறன் கொண்ட Nvidia சிப்களில் அதிக முதலீடு செய்துள்ளார்.