விளையாட்டில் சீட்டிங்கா? - அதிரடியாக வெளியேற்றப்பட்ட எலான் மஸ்க்
எலான் மஸ்க் வீடியோ கேமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் Tesla, SpaceX, Starlink, X(டிவிட்டர்) உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரே தற்போது உலக பணக்காரார்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
வீடியோ கேம்
இந்நிலையில் எலான் மஸ்க் பாத் ஆஃப் எக்ஸைல் 2 என்ற வீடியோ கேமை விளையாடியுள்ளார். அப்போது வீடியோ கேமில் பல்வேறு செயல்களை அவர் மிக வேகமாக செய்ததாக கூறப்படுகிறது.
Wasn’t even using a macro lol pic.twitter.com/nDb9REalB5
— Elon Musk (@elonmusk) December 13, 2024
இதனையடுத்து அந்த கேமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான ஸ்க்ரீன்சாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சிறிய அளவில் கூட நான் அதை செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.