‘’ நான் சும்மா சொன்னேன் ‘’ Fun பண்ணிய எலான் மஸ்க் .. கொந்தளித்த இணையவாசிகள்
மான்செஸ்டர் யுனிடெட் கால்பந்து அணியை எலான் மஸ்க் வாங்க போவதாக தான் சொன்னது நகைச்சுவைக்காக என பதிவிட்ட்டுள்ளார்.
எலான் மஸ்க்
உலகின் பெரும் பண்க்காரர்கள் வரிசையில் முக்கியமானவராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் சமீபத்தில் கடந்த சில மாதங்க்ஜளுக்கு முன்பு ட்விட்டரை வாங்க முடிவு செய்ததும், பின்னர் பின்வாங்கியதும் உலக அளவில் பேசு பொருளானது

கால்பந்து அணியை வாங்க திட்டம்
இந்நிலையில் தற்போது பிரபல கால்பந்து க்ளப் அணியான மான்செஸ்டர் யுனிடெட் அணியை தான் வாங்க போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் வைரலானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் இந்த அணியை எலான் மஸ்க் வாங்க போவதாக சொன்ன நிலையில் சில மணி நேரங்கள் கழித்து அதை தான் சும்மா நகைச்சுவைக்காக சொன்னதாக அவரே பதிவிட்டுள்ளார்.
மஸ்கின் இந்த பதிவிற்கு ட்விட்டர்வாசிகள் பலரும் பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.