ஆணாதிக்கம் அதிகம்.. முடி கலரை கூட மாற்றச்சொல்லி மிரட்டிய எலான் மாஸ்க் - முன்னாள் மனைவி!

United States of America Elon Musk
By Vinothini Oct 04, 2023 11:14 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

எலான் மாஸ்க்கின் முன்னால் மனைவி அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜஸ்டின் மஸ்க்

எலான் மாஸ்க்கின் முன்னாள் மனைவியான ஜஸ்டின் மஸ்க் ஒரு எழுத்தாளர் ஆவார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளது. இவர் 2010-ல் மேரி கிளாரி பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவரது திருமண வாழ்க்கை குறித்து எழுதியுள்ளார். அதில், "எங்கள் திருமண வரவேற்பில் நாங்கள் நடனமாடியபோது, 'இந்த உறவில் நான்தான் ஆல்பா" ​​என எலான் என்னிடம் கூறினார் என்று எழுதியிருந்தார்.

elon-musk-first-wife-opened-about-him

"நான் அதை புறம் தள்ளினேன், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவர் தீவிரமானவர் என்பதை அறிந்தேன். அவர் தென்னாப்பிரிக்காவின் ஆண் ஆதிக்க கலாச்சாரத்தில் வளர்ந்தவர். மேலும் போட்டி மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை அவரை வணிகத்தில் மிகவும் வெற்றிகரமாக ஆக்கியது" என்றார்.

வறுத்தெடுக்கும் வெயில்.. ஒரே மாதத்தில் வரலாறு காணாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு - தவிக்கும் நாடுகள்!

வறுத்தெடுக்கும் வெயில்.. ஒரே மாதத்தில் வரலாறு காணாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு - தவிக்கும் நாடுகள்!

மிரட்டல்

இதனை தொடர்ந்து, அவர், "எங்களுக்கு இடையேயான பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், திருமணத்திற்கு அடுத்த மாதங்களில், பிரச்னையாக தொடங்கியது. எலானின் தீர்மானங்கள் என்னை முறியடித்தது, மேலும் அவர் என்னிடம் இல்லாதவற்றைப் பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். அதற்கு 'நான் உங்கள் மனைவி, பணியாளர் அல்ல' என்று அவரிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன்.

elon-musk-first-wife-opened-about-him

அப்போது, “நீ என் பணியாளராக இருந்தால், நான் உன்னை பணிநீக்கம் செய்வேன்" என்று அடிக்கடி கூறி வந்தார். மேலும், எலான் தனது தலைமுடியை பொன்னிறமாக மாற்றுமாறு வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.