ட்விட்டர் ரொம்ப நஷ்டத்தில் போகுது வேற வழியில்லை : எலான் மஸ்க் விளக்கத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி

Twitter Elon Musk
By Irumporai Nov 05, 2022 09:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக எலன் மஸக் பொறுப்பேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்த நிலையில் அதற்கான காரணத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மாஸ்க் நடவடிக்கை

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ 3.6 லட்சம் கோடிக்கு வாங்கினார்.

அப்போதே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் ட்விட்டர் தனது வசம் வந்தவுடனே ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் , சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற உயர்மட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர். 

ஆட்கள் குறைப்பு நடவடிக்கை

மேலும், ட்விட்டரில் ப்ளுடிக் பெறுவதற்கு கட்டணம் என்ற புதிய முறையினையும் எலான் மஸ்க் கொண்டுவந்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த படி ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது .

அதன்படி நேற்று முன் தினம் தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது. அதில் ஊழியர்கள் யாரும் அலுவலகம் வர வேண்டாம் நீங்கள் வேலையில் இருப்பீர்களா இல்லையா என்பது குறித்து உங்களுக்கு தகவல் அனுப்படும் என ட்விட்டர் மெயில் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

குறிப்பாக ட்விட்டரிலிருந்து இந்திய ஊழியர்கள் அதிகம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யும் எலான் மஸ்க்கின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

நஷ்டத்தில் ட்விட்டர்

இந்த நிலையில் தற்போது ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளித்திருக்கிறார் எலான் மஸ்க். அதில் ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் $4 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது.

ஆகவே ஆட்குறைப்பு செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி தேவைப்படுவதை விட 50% அதிகமானது. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.