தகவல் தொழில்நுட்பத்தின் கில்லாடி... எலான் மஸ்க் கல்வித் தகுதி என்ன தெரியுமா?
உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க சில கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் கல்விப் பயணம் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்பேஸ் எக்ஸ்...
ஸ்பேஸ் எக்ஸ்... டெஸ்லா... இவையெல்லாம் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்திலும் வாகன உற்பத்தியிலும் அசுரப் பாய்ச்சல் காட்டும் சர்வதேச முன்னணி நிறுவனங்களுக்கு உரிமையாளர் தான் எலான் மஸ்க். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 16 லட்சம் கோடியாகும் .
இப்படி முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்துவதில் கில்லாடியான எலான் மஸ்க்கின் கல்விப் பயணம் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். தனது 18 வயதில் கனடாவிற்குக் குடிபெயர்வதற்கு முன்பு பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பயின்றார் எலான் மஸ்க் .
எலான் மஸ்க்
பெற்றோர் விவாகரத்து செய்த பிறகு கனடாவில் தாய் மூலம் குடியுரிமை பெற்றார். பின்னர் தனது உயர்கல்வியை கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்குத் தனது படிப்பை மாற்றிக் கொண்டார்.
அங்கு அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1995 இல் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இவர் பிஎச்.டி.படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியேறினார். மேலும் அவரது சகோதரர் கிம்பாலுடன் இணைந்து மென்பொருள் நிறுவனமான Zip2 ஐ தொடங்கினார்.
இதனையடுத்து 2022 இல் எலான் மஸ்க் ட்விட்டரை $44 பில்லியனுக்குக் வாங்கினார் . மேலும் ட்விட்டர் பெயரை மாற்றி X தளம் எனப் பெயரிட்டார் . கடந்த ஆண்டு 2023 மார்ச் மாதம் மஸ்க் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனமான AI உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.