இந்தியர்களை வெளியேற்றிய எலான் மஸ்க் .. சொந்தமான ட்விட்டர் நிறுவனம் - நடந்தது என்ன?

Twitter Elon Musk
By Irumporai Oct 28, 2022 05:19 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

எலான் மஸ்க் மிகவும் குறைந்த காலத்திலேயே உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.

டெக் ஜாம்பவான் எலான் மஸ்க்

தற்போது எலான் மஸ் கையில் 5 நிறுவனங்கள் வெவ்வேறு துறையில் இயங்கும் நிறுவனங்களை வைத்துள்ள நிலையில் தற்போது மக்களுக்குச் சுதந்திரமாகப் பேச வாய்ப்பையும், அதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் பெரும் தடுமாற்றத்திற்குப் பின்பு ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளார்.

வெளியேறிய இந்திய அதிகாரிகள்

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய செய்தி உறுதியான அடுத்த நிமிடம் டிவிட்டர் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியர்களை வெளியேற்றிய எலான் மஸ்க் .. சொந்தமான ட்விட்டர் நிறுவனம் - நடந்தது என்ன? | Elon Musk Completes 44Bn Twitter Takeover

ட்விட்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தொடுத்த வழக்கின் விசாரணையில் எலான் மஸ்க் மனம் மாறி ட்விட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார்.

இதைத் தொரட்ர்ந்து நீதிமன்றம் அக்டோபர் 28 அதாவது வெள்ளிக்கிழமைக்குள் கைப்பற்றியாக வேண்டும் என உத்தரவிட்டது. 

பணம் சம்பாதிக்கும் ஆர்வம் இல்லை 

முன்பே ட்விட்டரை கைப்பற்ற போதுமான பணத்தைத் தயாராக வைத்திருந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் மன மாற்றத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே அனைத்துக் கைப்பற்றுவதற்கான பணிகள் வேகமெடுத்த நிலையில் கொடுக்கப்பட்ட ஒரு நாள் முன்னதாகவே ட்விட்டர் பங்குகளை மொத்தமாக 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் ட்விட்டரி கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வந்தவுடனே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே ஆகியோர் டிவிட்டர் நிறுவன பணியில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் எலான் மஸ்க் உறுதியளித்தார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆர்வம் இல்லை என்றும் , மனித குலத்திற்கு உதவும் வகையில் ட்விட்டரை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.