முகம் சுழிக்க வைக்கும் எலான் மஸ்க் செய்த டுவிட் - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!

Twitter Elon Musk Viral Photos
By Nandhini Feb 14, 2023 06:26 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

படுகேவலமாக டுவிட் செய்த எலான் மஸ்க்கின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏவுகணை ஏவுதளத்தில் மீது பறந்த சீன உளவு பலூன்

அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தரையில் எந்த இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க அமெரிக்க அதிகாரிகள் அதை அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும்போது சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்

இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு கோஸ்டாரிகாவிடம் மன்னிப்பு கேட்டது. பலூன் விமானப் பாதை அதன் அசல் திட்டத்திலிருந்து விலகியதாக சீன அதிகாரிகளால் கோஸ்டாரிகா அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சமீபத்தில் தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் பலூனை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க போர் விமானமான எஃப்-22 ராப்டரால் ஏவப்பட்ட ஏவுகணையால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்க-கனடா வான் எல்லைக்குள் பறந்த மர்ம பொருள்

கடந்த சனிக்கிழமை அமெரிக்க-கனடா வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்த மர்ம பொருள் கனடாவின் யுகோன் மாகாணத்திற்கு அருகே அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த 3 சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

elon-musk-chief-executive-officer-of-twitter

ஏலியன்கள் நிற்கிறார்கள் -

சமீபத்தில் கவலைபடாதீர்கள்... எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்... என்று இந்த உளவு பலூனை தொடர்புப்படுத்தி நகைச்சுவையாக எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.

படுகேவலமாக டுவிட் செய்த எலான் மஸ்க்

இந்நிலையில், எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் படுகேவலான ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருவர் இறுதி முடிவு, நான் இப்போது அதிகாரப்பூர்வமாக டுவிட்டரை விட்டு வெளியேறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் சிலரோ இந்த டுவிட் பதிவிற்கு ஆதரவும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 

இதோ அந்த டுவிட் -