டுவிட்டர் CEO-வாக ‘நாயை’ நியமித்த எலான் மஸ்க்... - ஷாக்கான நெட்டிசன்கள்...!
டுவிட்டர் CEO-வாக ‘நாயை’ எலான் மஸ்க் நியமித்து டுவிட் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்
அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தரையில் எந்த இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க அமெரிக்க அதிகாரிகள் அதை அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும்போது சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர். இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு கோஸ்டாரிகாவிடம் மன்னிப்பு கேட்டது.
இதனையடுத்து, சமீபத்தில் தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் பலூனை சுட்டு வீழ்த்தியது. மேலும், கடந்த சனிக்கிழமை அமெரிக்க-கனடா வான் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்த 3 சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஏலியன்கள் நிற்கிறார்கள் -
சமீபத்தில் கவலைபடாதீர்கள்... எனது சில நண்பர்கள் வந்து நிற்கிறார்கள்... என்று இந்த உளவு பலூனை தொடர்புப்படுத்தி நகைச்சுவையாக எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.
டுவிட்டர் CEO-வாக நாயை நியமித்த எலான் மஸ்க்
இந்நிலையில், டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமானவர்... அவர் எண்களில் சிறந்தவர்.. அவருக்கு ஸ்டைல் உள்ளது... மற்ற பையனை விட மிகவும் சிறந்தது.. என்று பதிவிட்டுள்ளார். தற்போது டுவிட்டருக்கு CEO-வாக ‘நாயை’ நியமித்த எலான் மஸ்க்கை பலர் விமர்சனம் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
And has ?? style pic.twitter.com/9rcEtu9w1Z
— Elon Musk (@elonmusk) February 15, 2023
He’s great with numbers! pic.twitter.com/auv5M1stUS
— Elon Musk (@elonmusk) February 15, 2023
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023