புதிய சமூக வலைத்தளத்தை தொடங்கும் எலான் மஸ்க்? - ட்விட்டரில் வைரலாகும் பதிவு

elonmusktweets newsocialmedia openalgorithm
By Swetha Subash Mar 27, 2022 08:54 AM GMT
Report

எலான் மஸ்கின் புதிய ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

உலக பணக்காரர்களின் ஒருவரும் டெஸ்லா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் விரைவில் ஒரு சமூக வலைத்தளத்தை தொடங்குவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பிய நபர் ஒருவர் " நீங்கள் ஒரு புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்க பரிசீலிப்பீர்களா?

பேச்சு சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கடைபிடிப்பது தொடர்பானவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் ஒரு சமூக வலைத்தளம் தேவை என்று நான் நினைக்கிறேன்" என கேட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் " இது பற்றி நான் தீவிரமாக சிந்திக்க போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.