நீ செத்துட்டா... எனக்கு உன் டுவிட்டரை தருவியா... - எலான் மஸ்க்கிடம் கேட்ட யூடியூபர் - வைரலாகும் டுவிட்
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளார். இனி, டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. டுவிட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பேசுகையில், முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன்.
டுவிட்டரை அதிகபட்சமாக FUN-ஆக மாற்றுவோம். டுவிட்டர் DMகளில் ‘சிக்னல்’ செயலி போன்ற END TO END ENCRYPTION இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் குறுந்தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் யூடியூபரின் கேள்விக்கு எலான் மாஸ்க் Fun ஆக பேசியுள்ள டுவிட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அதில், நான் மர்மமான முறையில் இறந்தால் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சி என்ற எலான் மஸ்க்ன் டுவிட்டிற்கு, யூடியூபர் மிஸ்ர் பீஸ்ட் என்பவர், அப்படி ஏதாவது நடந்தால் ட்விட்டரை நான் வைத்து கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க்கோ Fun ஆக சரி என்று பதிலளித்துள்ளார்.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்! Manithan
