ஊழியர்கள் வெளியேற்றம்... மொத்த சம்பளம் கட்... - டுவிட்டருக்கு புது ரூட் போடும் எலான் மஸ்க் - வெளியான தகவல்
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளார். இனி, டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
டுவிட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பேசுகையில், முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன். டுவிட்டரை அதிகபட்சமாக FUN-ஆக மாற்றுவோம். டுவிட்டர் DMகளில் ‘சிக்னல்’ செயலி போன்ற END TO END ENCRYPTION இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் குறுந்தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு ஊழியர்களை வெளியேற்றவும், செலவுகளை குறைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கியமாக, டுவிட்டரின் பாலிசி துறையில் ஊழியர்களை வெளியேற்றுவது பற்றி எலான் மஸ்க் ஆலோசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு வங்கியாளர்களிடம் எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், டுவிட்டர் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கெனவே, டுவிட்டர் தன் கையில் வந்தால் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
