டுவிட்டரை Fun ஆக மாற்றப்போறோம்... - எலான் மஸ்க் அறிவிப்பு

Elon Musk
By Nandhini Apr 28, 2022 07:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளார். இனி, டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார்.

டுவிட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பேசுகையில், முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன் என்றும், டுவிட்டருக்கு என மிகப்பெரிய சக்தி இருக்கிறது.இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எலன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், டுவிட்டரை அதிகபட்சமாக FUN-ஆக மாற்றுவோம். டுவிட்டர் DMகளில் ‘சிக்னல்’ செயலி போன்ற END TO END ENCRYPTION இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் குறுந்தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார்.  

டுவிட்டரை Fun ஆக மாற்றப்போறோம்... - எலான் மஸ்க் அறிவிப்பு | Elon Musk