டெல்லி விமான நிலையத்தில் தீபிடித்த விமானம் : அலறிய விமானிகள் .. நடந்தது என்ன?

Viral Video
By Irumporai Oct 29, 2022 07:05 AM GMT
Report

பிரபல இந்திய விமானம் புறப்படும் போது திடீரென தீ பிடித்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ பிடித்த விமானம்

இந்தியாவின் பிரபல விமான நிறுவனம் இண்டிகோ விமான நிறுவனம்.இது பல ஆண்டுகளாக மக்களுக்கு விமான சேவையினை கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் விமானிகள் ஊழியர்கள் மற்றும் பயனிகள் என சுமார் 184 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் ஆகாயத்தில் பறப்பதற்காக ஓடு பாதையில் முழு வேகமாக சென்றது.

அலறிய பயணிகள்

விமானம் பறக்க சில வினாடிகள் இருந்த போது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனை பார்த்து பயந்த பயணிகள் சிலர் அலறி கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் தீபிடித்த விமானம் : அலறிய விமானிகள் .. நடந்தது என்ன? | Elhi Indigo Flight Got Fire Viral Video

இந்த சமபவத்தை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார், அதில் பயணித்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் பத்திரமாக மீட்கபட்டனர்.

அதிகாரிகள் விசாரணை

இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) DGCA வின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதைக் கவனித்து விரைவில் அறிக்கை கொடுக்குமாறு தெரிவித்துள்ளது.

  இந்த நிலையில், விமானம் ஓடு பாதையில் செல்லும் போது தீபிடித்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது