கோவையில் பாகுபலி யானையை பிடிக்க தனிக்குழு அமைப்பு!
Forest
Coimbatore
Elephent
By Thahir
சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஆறு மாதங்களுக்கு மேலாக குடியிருப்பு பகுதியில் சுற்றிவருகிறது. யானையை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை.
இந்நிலையில், இந்த பகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் யானையின் கழுத்துப் பகுதியில் ரேடியோ காலரை பொருத்த தமிழக தலைமை வன உயிரியல் காப்பாளர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து 14 பேர் கொண்ட தனிக்குழு யானையை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நான்கு குழுக்களாக பிரிந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து
அதை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
