சுவாச கோளாறு காரணமாக யானை உயிரிழப்பு

Elephant
By Irumporai Jul 30, 2022 01:01 PM GMT
Report

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

சுவாச கோளாறு காரணமாக யானை உயிரிழப்பு | Elephat Death Today Rohini

இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரித்து வந்த 26 வயதுடைய யானை ரோகினி இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.

சுவாச கோளாறு, கல்லீரல்,கிட்னி பிரச்சினை ரோஹினிக்கு இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சிகிச்சை பலன் என்று இன்று காலை யானை உயிரிழந்தது.