‘நாராயணா..நமக்கு சோறு தான் முக்கியம்’ - உணவு தேடி நீச்சலடித்தபடியே ஊருக்குள் சென்ற காட்டு யானைகள்; வைரலாகும் வீடியோ

anaimalaitigerreserve elephantswims twinelephants
By Swetha Subash Mar 23, 2022 07:34 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

வால்பாறை சோலையார் அணையில் உணவைத் தேடி நீச்சலடித்து வந்த காட்டு யானைகளின் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வனப்பகுதி சுமார் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.

‘நாராயணா..நமக்கு சோறு தான் முக்கியம்’ - உணவு தேடி நீச்சலடித்தபடியே ஊருக்குள் சென்ற காட்டு யானைகள்; வைரலாகும் வீடியோ | Elephants Swimming Across River Reaches Village

குறிப்பாக, நல்லமுடி பூஞ்சோலை, மூடீஸ், சிறுகுன்றா, பழைய வால்பாறை, ரொட்டிகடை பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த காட்டு யானைகள் அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்துவிடாமல் கண்காணிக்க வனத்துறையினர் தொடர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘நாராயணா..நமக்கு சோறு தான் முக்கியம்’ - உணவு தேடி நீச்சலடித்தபடியே ஊருக்குள் சென்ற காட்டு யானைகள்; வைரலாகும் வீடியோ | Elephants Swimming Across River Reaches Village

இந்நிலையில் சோலையார் அணை எதிர்புறம் உள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் நீச்சலடித்த படியே மக்கள் வசிக்கும் பகுதிக்கு உணவு தேடி வந்துள்ளன.

யானை அணையில் நீச்சலடித்த படியே ஊருக்குள் வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.