அந்த மனசுதான் சார்.. இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கிய யானைகள் - காப்பாற்றிய ஆர்வலர்கள்
கென்யாவில் சேற்றில் சிக்கிய இரண்டு பெண்யானைகள் மீட்கப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிகம் பாதிக்கப்படும் யானைகள்
பருவ நிலைமாற்றம் , நகரமயமாக்கல் இவற்றால் அஹிகம் பாதிக்கப்படுவது காட்டு விலங்குகளே , அதிலும் குறிப்பாக யானைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதே சமயம் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ,இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதை நாம் பார்க்கலாம்.
சேற்றில் சிக்கிய யானைகள்
அந்த வகையில் கென்யாவில் நீர் அருந்த வந்த இரண்டு பெண் யானைகள் சேற்றில் சிக்கிகொண்டன, இதனால் மூன்று நாட்களாக சேற்று சகதியில் சிக்கியவாறு இருந்துள்ளன.
இது குறித்து தகவலறிந்த ஷெல்ட்ரிக் வைல்ட்லைட் டிரஸ்ட் அந்த யானைகளை காப்பாற்றினர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
இதனை வீடியோவாக பதிவிட்டுள்ள வைல்ட்லைட் டிரஸ்ட் நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் : இந்த இரண்டு பெண்களுக்கும் இந்த சகதி, ஒரு மரண பொறியாக மாறியது
வறட்சியின் போது இது மிகவும் பொதுவான சூழ்நிலை: தண்ணீருக்கான தேடலில், யானைகள் அணைகளுக்குள் நுழைந்து சேற்றில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய தளங்கள் மற்றும் ஒட்டும் நிலப்பரப்பை எதிர்கொள்வதால், அவற்றால் அங்கு நிற்ல முடியவில்லை, இது யானைகளுக்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையாக மாறும்
ஆகவே இந்த யானைகளை நாங்கள் கண்டுபிடிக்கும் முன்பு இரண்டு நாட்களுக்கு முன்பே சிக்கிக்கொண்டன. ஆனால் இந்த கதை ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுள்ளது, வைல்ட் லைஃப் ஒர்க்ஸ் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலமாக இந்த இரண்டு பெண் யானைகளையும் சுலபமாக மீட்க முடிந்தது.
என தனது இன்ஸ்டகிராம் பதிவில் கூறியுள்ளது.
இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் வைல்ட் லைஃப் ஒர்க்ஸ் குழுவினரை பாராட்டி வருகின்றனர்.