இனி யானை பாகன்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு : முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு

M K Stalin Elephant
By Irumporai Mar 15, 2023 07:31 AM GMT
Report

யானைகள் முகாமில் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

யானை பாகன்களுக்கு நிதி

கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்துள்ளார். யானை பராமரிப்பாளர்கள் வசிக்க தேவையான சுற்றுசூழலுக்கு இசைந்த வீடுகள் கட்ட நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு, ஆனைமலை கோழிகமுத்து யானை முகாமில் உள்ள 91 பணியாளர்கள் பயனடைய நிதியுதவியினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இனி யானை பாகன்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு : முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு | Elephants Rs 1 Lakh Prize Announcement Cm Stalin

5 கோடி நிதி

இதே போல் ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் அடிப்படை வசதிகளுடன் ரூ.8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும். ஆனைமலையில் உள்ள கோழிகமுத்து யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 மேலும், முகாமில் பணியாற்றும் 91 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லாட்சம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளர். இதனிடையே, சென்னையில் தலைமை செயலகத்தில் ஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவண குறும் படத்தில் பங்குபெற்ற தம்பதிகள் முதலமைச்சர் ஸ்டாலினௌ சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதுமலை தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.