அப்பாடா ஒரு வழியாஅவங்க இடத்துக்கு போயிட்டாங்களா ?.. நிம்மதி பெருமூச்சு விட்ட சீனா !

elephant video china Elephant Elephant china
By Irumporai Aug 11, 2021 05:00 PM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சமீபத்தில் சீனாவில் காட்டுக்கு நடுவே ஒரு கூட்டமாக, ஒரு குடும்பமாக யானைகள் படுத்து உறங்குவதும் அதில் ஒரு குட்டி யானை சேட்டையும் உலகம் முழுக்க வைரலானது, இந்த நிலையில் சீனாவின் யானைக் கூட்டம் மீண்டும் தங்கள் வாழ்விடத்துக்கே திரும்பிவிட்டன.

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஒரு காட்டுப்பகுதி யானைகள் சரணாலயமாக உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்த யானைகள் 17 மாதங்களுக்கு முன்பு மக்கள் பகுதிகளில் இடம்பெயரத் தொடங்கின.

அதுவும் ஒரு கூட்டமாக. மெதுவாக நடந்தாலும், நீண்ட தூரம் நடக்கும் குணமுடைய யானைகள் இதுவரை 500 கிமீக்கும் அதிகமான தூரத்தை கடந்துவிட்டன. காடுகள், மலைகள் என யானைகள் கால்படாத இடமே இல்லை. யானைகளின் இந்தப் பயணத்தில் கட்டிடங்களும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன.

தங்கள் இடத்தை விட்டு நகரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாம் என யோசித்த சீன அரசு யானைகளின் பயணத்தை தீவிரமாக கண்காணித்தது. யானைகளின் பயணத்தை கண்காணிக்க சுமார் 25000 போலீசார் பணியில் இருந்து யானைகளை கண்காணித்தனர். கேமரா, ட்ரோன் என யானைகளை பின் தொடர்ந்த சீன அரசு. மீண்டும் யானைகளை காடுகளுக்கு அனுப்ப நினைத்தது. ஆனால் யானைகள் அப்படி நினைக்கவில்லை.

தங்கள் மனம் போன போக்கில் தங்களது பாதையை தேடிச் சென்ற யானைகள் தற்போது மீண்டும் தங்கள் வாழ்விடத்துக்கே திரும்பிவருகின்றன. இதனால் சீன அரசு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. குறிப்பாக இந்த யானைகள் எந்த தொந்தரவு இல்லாமல் தங்கள் வாழ்விடங்களுக்கு செல்ல வேண்டுமெனதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் யானைகள் செல்லும் வழித்தடத்தில் இருந்து அப்புறப்படுத்திதற்காலிக பாதைகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. காட்டுக்குள் இருந்த யானைகள் திடீரென தங்கள் வாழ்விடத்தில் இருந்து கிளம்பியது ஏன்? ஏன் ஊருக்குள் நுழைந்து மீண்டும் தன் வாழ்விடத்தை நோக்கியே செல்கின்றன? சீன யானைகளின் இந்த பயணம் மனிதர்களாகிய நமக்கு ஆச்சர்யம் என்றே கூறலாம் .

வாழ்விடத்தை மாற்ற நினைத்த யானைகள் மனிதர்கள் இருப்பதால் தங்களின் பழைய வாழ்விடத்தை நோக்கியே சென்றிருக்கலாம் என யூகிக்கின்றனர் வன ஆர்வலர்கள் .

எப்படியோ யானைகள் மீண்டும் தங்கள் வாழ்விடத்தை நோக்கி திரும்பியுள்ளதால் சீன அரசு தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறது.