யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை : சோதனையில் முடிவு!
corona
elephant
tamilnadu
By Irumporai
முதுமலை வளர்ப்பு யானைகளுக்கும் தொற்று இல்லை என சோதனையில்தெரிய வந்துள்ளது.
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள, ஒன்பது சிங்கங்களுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி, முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடம் பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில் முதுமலையில் சோதனை செய்த 28 வளர்ப்பு யானைகளுக்கு தொற்று இல்லை' என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.