வழிதவறி 500 கி.மீ. நடந்து ஊருக்குள் வந்த யானைகள்
சீனாவில் திசைமாறி ஊருக்குள் வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள யோனன் மாகாணத்தின் ஹூனிங் நகருக்குள் கடந்த 3 ஆம் தேதி 15 காட்டு யானைகள் திடீரென புகுந்தன. கும்பலாக யானைகள் வீதிகளில் நடந்து கிடைத்ததை உண்டதை கண்ட பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து வனத்துறை நடத்திய ஆய்வில் வனப்பகுதியில் இருந்து வழிதவறி எதிர்திசையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த யானைகள் நடக்கத் தொடங்கியதாக தெரிய வந்தது.
சுமார் 500 கி.மீ. நடந்து நகருக்குள் வந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட தூரம் நடந்த யானைகள் களைப்படைந்து படுத்து ஓய்வெடுத்து வருகின்றன.
களைப்பு நீங்கி பிறகு அவை பயணத்தை தொடரும் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.