தூங்கிய பெண்ணை தட்டியெழுப்பிய க்யூட் யானை : வைரலாகும் வீடியோ
இணையத்தில்விலங்குகளின் க்யூட் வீடியோ வைரலாகும் , குறிப்பாக யானைகள் வீடியோக்கள் இணைஅய்த்தை ஆக்கிரமிக்கும் . அந்த வகையில் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

தட்டி எழுப்பும் யானை
தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்
இன்ஸ்டாவில் 53 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 2,20,000 லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.