யானைகள் முகாமில் கோவில் யானை மீது கொடூர தாக்குதல்

forest action sriviliputhur
By Jon Feb 27, 2021 12:50 PM GMT
Report

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களில் உள்ள யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் யானைகள் முகாம் நடைபெற்று வருகிறது . கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாமில்,ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையினை தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அந்த காட்சியில் யானையின் காலில் பாகன்கள் இருவர் தாக்குவது போன்று வீடியோ வெளியானது. கொடூராமக யானை துன்புறுத்தல் செய்த பாகன்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 படி நடவடிகைள் எடுக்க புகார் கொடுக்கபட்டது. புகாரின் அடிப்படையில் யானையை தாக்கிய பாகன் ராஜனை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

யானைகளுக்கு முகாமிற்கு வருவதே சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் ஆனால் இங்கும் அவை தாக்கபடுவது கொடுமையானது என வேதனை தெரிவிக்கின்றனர் விலங்குகள் நல ஆர்வளர்கள்.