பூச்செண்டு கொடுத்து பெண் யானையிடம் காதலை சொல்லும் ஆண் யானை - வைரலாகும் வீடியோ
ஆண் யானை ஒன்று பெண் யானையிடம் காதலை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக யானை என்றாலே அதன் பெரிய தோற்றமும், அது செய்யும் சுட்டித்தனமான செயல்களும் தான் நியாபகம் வரும். கடவுள் விநாயகரின் மறுவுறுவமாக பார்க்கப்படும் யானைகள் குறித்த தகவல்கள் ஒன்றொன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது உண்மை.
மேலும் யானைகள் மனிதர்களை போலவே சில செயல்களில் ஈடுபடுவதை காண்பது இன்னும் அழகாக இருக்கும். அந்த வகையில் ஆண் யானை ஒன்று ஒரு பூங்கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எலிஃபெக்ஸோஃப்வேர்ல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் ஆண் யானை ஒன்று ஒரு பூங்கொத்தை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு தனது பெண் யானையை நோக்கி ஓடியது. பெண் யானையின் அருகில் சென்றவுடன் தனது துதிக்கையால் பூக்களை தனது பெண் யானைக்கு கொடுத்தது. மேலும் துதிக்கையை வளைத்து வளைத்து சைகை செய்தது.
ஆண் யானையின் ப்ரோபோசலை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்ட பெண் யானை பூங்கொத்தை ஆண் யானைக்கு அருகில் கொண்டு சென்றது. பின்னர் இருயானைகளும் பூங்கொத்தை பிடித்துக் கொண்டன. இந்த கிளிப் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.