தொப்பியை விழுங்கியது போல நடித்து பெண்ணுடன் க்யூட்டாக விளையாடும் யானை - வைரலாகும் வீடியோ

elephant video goes viral playing with woman pretends
By Swetha Subash Dec 19, 2021 01:13 PM GMT
Report

காட்டிற்குள் சுற்றுலா வந்த பெண்ணின் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்த யானையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது எப்போதும் தனித்துவமானது. மனிதனைக் காட்டிலும் அன்பிலும், குறும்புத்தனத்திலும் விலங்குகள் எப்போதும் அதிகளவிலே காட்டும்.

அந்த வரிசையில் யானையின் அன்பும், குறும்புத்தனம் அலாதியானது. உருவத்தில் மிகப்பெரிய தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் யானை, குழந்தைத்தனத்திலும், அன்பிலும் குழந்தையைப் போன்று மனிதர்களிடம் நடந்து கொள்ளும் குணம் கொண்டது.

இந்த நிலையில், காட்டிற்குள் சென்ற சுற்றுலா பயணி ஒருவரிடம் மிகப்பெரிய காட்டு யானை ஒன்று தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஃபன்னி சப்ளை என்ற டுவிட்டர் பக்கத்தில், ஒரு நடுத்தர வயது பெண் ஒருவர் யானையின் முன்பு தொப்பி அணிந்துகொண்டு நிற்கிறார்.

அப்போது, சட்டென்று அந்த யானை அந்த பெண்மணியின் தலையில் இருந்த தொப்பியை தனது தும்பிக்கையால் எடுத்து வாயில் வைத்துக்கொண்டது.

அப்போது, இதைக் கண்டு சிரித்த அந்த பெண்மணி "இந்த தொப்பி என்னுடைய சகோதரி எனக்கு அளித்தது. தயவு செய்து என்னுடைய தொப்பியை திருப்பிக் கொடுத்துவிட முடியுமா?" என்று கெஞ்சலாக கேட்க,

சற்றே நேரத்தில் அந்த யானையும் அந்த பெண்ணிடம் மீண்டும் தொப்பியை ஒப்படைத்தது. இதை கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

மிகப்பெரிய தந்தத்துடன் காணப்பட்ட அந்த யானை, குழந்தைத்தனத்துடன் விளையாடிய இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

மேலும், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.