தாயுடன் குட்டியை இணைத்த வனத்துறையினர்... - தன் துதிக்கையை தூக்கிக் காட்டி நன்றி கூறிய தாய் யானை...!

Viral Video Elephant
By Nandhini Sep 23, 2022 05:28 AM GMT
Report

குட்டியை, தாயுடன் இணைத்த வனத்துறையினருக்கு தன் துதிக்கையை தூக்கிக் காட்டி நன்றி கூறிய தாய் யானையின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி கூறிய தாய் யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பிறந்து 2 வாரம் ஆன குட்டி தாயிடமிருந்து தவறி வழித்தெறியாமல் சென்றுவிட்டது.

தன்னந்தனியே சுற்றித் திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அந்த குட்டி யானையை கடந்த புதன்கிழமை வனத்துறையினர் தாயுடன் சேர்த்து வைத்தனர்.

அப்போது, குட்டி யானையுடன் தாய் யானை கூட்டிச் செல்லும்போது வனத்துறையினரை பார்த்து நன்றி கூறும் விதமாக தன் துதிக்கையை தூக்கிக் காட்டியது தாய் யானை.

அப்போது, வனத்துறையினர் தாய் யானைக்கும், குட்டி யானைக்கும் டாடா காட்டி வழியனுப்பி வைத்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

elephant - viral video