மலைப்பகுதியில் சரிந்து விழுந்து இளம்பெண் யானை பலி! பொதுமக்கள் சோகம்!
பொதுமக்கள் சோகம்! மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இளம் பெண் யானை இன்று தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம் பகுதி மேலே அடர்ந்த வனப்பகுதிக்குள் இஞ்சிக்குழி, உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது.

இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, மிளா,மன் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் முண்டந்துறை வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் பேசுகையில், இது சுமார் 15 முதல் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் சரிந்து விழுந்து இறந்தது என்று கூறியுள்ளார்.