ஆயிரத்தில் ஒரு யானைக்குத்தான் இந்த சிறப்பம்சம் இருக்கும் - இறந்த லட்சுமி குறித்து வெளியான தகவல்...!

Elephant Puducherry Death
By Nandhini Dec 01, 2022 08:15 AM GMT
Report

ஆயிரத்தில் ஒரு யானைக்குத்தான் இந்த சிறப்பம்சம் இருக்கும் என்று இறந்த லட்சுமி குறித்து வனத்துறை காப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

யானை லட்சுமி உயிரிழந்தது

நேற்று காலை வழக்கம்போல் காமாச்சி அம்மன் கோயில் சாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை லட்சுமி, திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997ம் ஆண்டு 5 வயதாக இருந்தபோது லட்சுமி வந்தது.

புத்துணர்வு முகாமில் உள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ந்து அருள்பாலித்து வந்தது. உயிரிழந்த யானை லட்சுமி, மணக்குள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

லட்சுமி யானையை பக்தர்கள் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யானை லட்சுமி உயிரிழப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது.

elephant-lakshmi-sri-manakula-vinayagar-temple

கதறி அழுத பாகன்

நேற்று மாலை யானை லட்சுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். யானை வளர்த்த பாகன் யானை லட்சுமி உடலைப் பார்த்து கதறி அழுதார். இவர் அழுததைப் பார்த்த பக்தர்கள் நிலைகுலைந்துவிட்டனர்.

யானை லட்சுமியின் சிறப்பம்சம்

இந்நிலையில், யானை லட்சுமியின் சிறப்பம்சம் குறித்து வனத்துறை காப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி வனத்துறை காப்பாளர் வஞ்சுளவள்ளி பேசுகையில், பொதுவாக பெண் யானைகளுக்கு தந்தம் இருப்பது வெளியே தெரியாது. ஆனால் லட்சுமிக்கு, வளர்ந்திருப்பது சிறப்பான ஒன்று. ஆயிரத்தில் ஒரு யானைக்குத்தான் இது போன்ற வளரும் என்றார்.