கோவையில் அட்டகாசம் - காட்டு யானை மக்னாவை பிடிக்க களமிறங்கும் 3 கும்கி யானைகள்..!
கோவையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானை மக்னாவை பிடிக்க 3 கும்கி யானைகள் களமிறங்க உள்ளன.
கோவையில் மக்னா யானை அட்டகாசம்
கோவை மாநகருக்குள் புகுந்த மக்னா வகை யானை 3-வது நாளாக சுற்றித் திரிந்துக் கொண்டு வருகிறது.
குடியிருப்புகள், சாலைகள், தோட்டங்களை கடந்து யானை நடந்துச் சென்று அங்குள்ள சுவர்களை இடித்தும், தோட்டங்களை சூறையாடியும் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து காட்டு யானையை பிடிக்க 2 பிரிவுகளாக பிரிந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மக்னா யானை ஒரு வீட்டின் சுவரை உடைத்து வெளியே நடந்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
களமிறங்கும் 3 கும்கி யானைகள்
இந்நிலையில், ஊரை சூறையாடும் கட்டு யானை மக்னாவை, சின்னத்தம்பி, கலீம், முத்து ஆகிய 3 கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
பல பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை இடித்துத்தள்ளி, குடியிருப்புகளுக்குள் யானை உலா வருவதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முழு வீச்சில் இறங்கி கண்காணித்து வருகின்றனர்.