டயரில் சிக்கித் தவித்த குட்டி யானை - தாய் யானை செய்த நெகிழ்ச்சி சம்பவம்: கண் கலங்க வைக்கும் செயல்

தனது குட்டிக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த தாய் யானை, அந்த தொங்கும் டயரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் குட்டி யானை, பூங்கா ஒன்றில் விலங்குகள் கட்டிப்போடும் பகுதியில் விளையாடுகிறது. அப்போது அங்கு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள டயரில் அதனுடைய கால் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து மீண்டு வர அந்த குட்டியானை நீண்ட நேரமாக போராடுகிறது. பல முறை முயற்சித்தும் வெளி வர முடியாததால் தனது தாயை உதவிக்கு அழைக்கிறது.

நீண்ட நேரமாக குழந்தையை காணாமல் தவிக்கும் அந்த தாய் யானை, குட்டியின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வருகிறது. தாய் வந்த உற்சாகத்தில் தானாகவே அந்த டயரில் இருந்து வெளிவந்தது.

இதனை கண்ட தாய் யானை குட்டியானையை தலையில் தட்டி இழுத்து சென்றது. மேலும், இது போல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதை உணர்ந்த தாய் யானை, அங்கு தொங்கும் டயரை அப்புறப்படுத்த முயற்சித்தது.

ஆனால் அந்த யானையால் அந்த அப்புறப்படுத்த இயலவில்லை. தாய் யானையின் இந்த செயலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்