துரத்த சென்ற கும்பலை ஓட, ஓட விரட்டிய ஒற்றை காட்டு யானை... வைரலாகும் வீடியோ...!

Viral Video Assam Elephant
By Nandhini 2 மாதங்கள் முன்

துரத்த சென்ற கும்பலை ஓட, ஓட விரட்டிய ஒற்றை காட்டு யானை வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓட, ஓட விரட்டிய ஒற்றை காட்டு யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அஸ்ஸாம் மாநிலம், கோல்பராவில் உள்ள ரோங்ஜூலியில் நேற்று மாலை மக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் உணவுக்காக கூட்டமாக வந்தது.

உணவு தேடி தஞ்சம் அடைந்த யானைகள் நெல் பயிர்களை சேதப்படுத்தியது. அப்போது, இதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர் காட்டு யானையை விரட்ட சத்தம்போட்டு கூச்சல் போட்டு ஓடினர்.

அப்போது, பயந்துபோன காட்டு யானைகள் ஓடத் தொடங்கின. அப்போது, ஒரே ஒரு காட்டு யானை மட்டும் திரும்பி ஓடி வந்து கூட்டத்தை உள்ளூர்வாசிகளை ஓட ஓட விரட்டியது.காட்டு யானை ஓடி வருவதைப் பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    

elephant-goalpara-in-assam-viral-video