தமிழகத்தில் கடந்த 6 வருடத்தில் இவ்வுளவு யானைகள் இறந்துள்ளதா? வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ஆன்டனி ரூபின் என்பவர் தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை கேட்டு இருந்தார். அதற்கு வனத்துறை சார்பில் கொடுக்கபட்ட பதில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆம் , கடந்த ஆறு வருடங்களில் மட்டு தமிழகத்தில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில் 167 யானைகள் இறந்துள்ளன. கோவை மண்டலத்தில் 134 யானைகள் இறந்துள்ளன. தர்மபுரியில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டு 61 யானைகள் உயிரிழந்துள்ளன 2016-ல் 98 யானைகள் உயிரிழந்துள்ளன 2017-ல் 125 யானைகள் உயிரிழந்துள்ளன 2018-ல் 84 யானைகள் , 2019-ல் 108 யானைகள் மரணித்துள்ளன. 2020 செப். மாதம் வரை 85 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுட்டள்ளது. ஆக மொத்தம் 6 ஆண்டுகளில் உயிரிழந்த 561 யானைகளில், 161 யானை குட்டிகளும் அடக்கம்.
அதேபோல் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 7 யானைகள் உயிரிழந்துள்ளன. உணவு பற்றாக்குறை, யானை வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மின்வேலிகள், ரயில் விபத்து, வேட்டை போன்ற காரணங்களால் யானை உயிரிழப்பு என்பது அதிகரித்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. யானைகள் நம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமியை ஆட்சி செய்தவை யானைகள்.
இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமல்ல என்பதை எப்போது நாம் உணர்கின்றமோ அப்போது தான் இந்த காடுகளும் காடுகளின் தளபதியாக இருக்கும் யானைகளும் வாழ முடியும் .
இதே நிலை தொடர்ந்தால் யானைகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போகலாம் என அஞ்சுகின்றனர் உலகளாவிய வனத்துறை ஆர்வலர்கள்.