இறந்த யானைக்காக கதறி அழுத வனக்காவலர்: வைரலாகும் வீடியோ

cry heart mudumali
By Jon Jan 23, 2021 02:06 PM GMT
Report

முதுமலையில் இறந்த யானைக்கு வனப் பாதுகாவலர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்கம். அப்படி மசினக்குடியில் காயமடைந்த யானைக்கு முகாமில் வனத் துறையினர் சிகிச்சை அளித்துவந்தனர்.

அதில்,ஒரு வன பாதுகாவலர் மட்டும் அந்த யானையினை அக்கறையோடு கவனித்து வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் ,யானையை காப்பாற்ற முடியவில்லை. இறந்த யானையை பணியாளர்கள் லாரியில் ஏற்றினர். அப்போது, லாரியின் டயர் மீது ஏறிய அந்த வனப் பாதுகாவலர், யானையின் தந்தத்தை வருடிக் கொடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இந்த சோகமான காட்சியினை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோவைப் பகிர்ந்த இந்திய வனப் பணி அதிகாரிகள் சங்கம், சில உணர்வுப்பூர்வமான தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அவரை பொறுத்தவரை யானை மறையவில்லை இதயத்தில் அப்படியேதான் இருக்கும் எனகுறிப்பிட்டுள்ளது.