"ஒத்தைக்கு ஒத்த" - யானை முன் சீறி நின்ற காளை மாடு
ஓசூர் அருகே காட்டு யானை முன்பு சீறி நின்ற காளையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை நொகனுர், மரகட்டா, தாவரகரை வனப்பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருவதும், அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து அவ்வப்போது விவசாய பயிர்களை நாசம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் தாவரகரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மாடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக மாடுகளை விரட்டியது.
அப்போது அங்கிருந்த காளை மாடு ஒன்று காட்டு யானையை காண்டு அஞ்சாமல் தனது முன்னங்கால்களால் நிலத்தை கிளறியபடி எதிர்த்து நின்றது. இதையடுத்து இரண்டும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றது.