கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே - ஒரு வருடத்திற்கு பின் பாகனை சந்தித்த யானைகள் , வைரலாகும் வீடியோ !

elephant viralvideo
By Irumporai Dec 26, 2021 03:34 AM GMT
Report

ஒரு வருடத்திற்குப் பிறகு யானைகள் தங்கள் பராமரிப்பாளரைச் சந்திக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அன்பு என்பது மனித இனத்தை தாண்டி விலங்கு பறவை என எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. அன்பு பிரபஞ்சமொழியாக இருக்கிறது. அதுவே இந்த உலகத்தில் எல்லா உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதற்கான அடிப்படையாக இருக்கிறது.

குறிப்பாக யானைகள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதற்குள் அன்பு இருக்கும்போது அது ஒரு குழந்தையைப் போல மாறிவிடும். அதிலும் மனிதர்களால் வளர்க்கப்படும் யானைகள் அங்குசத்துக்கு பயந்து மட்டும் அது அடிபணிந்து நடப்பதில்லை.

ஒரு கட்டத்தில் மனிதர்களின் அன்புக்கு அடிமையாகிப் போவதால்தான் கட்டுப்பட்டு நடக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோவிற்கு பெயர் போன வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் யானைகள் தங்கள் பராமரிப்பாளரை ஒரு வருடத்திற்கும் பிறகு மீண்டும் சந்திக்கும்போது, சந்தோஷத்துடன் சத்தத்தை வெளிப்படுத்தி பாசத்தை காட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள வனத்துறை அதிகாரி சுஷாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் அற்புதமான காட்சி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.