நிறுத்து .. நிறுத்து .. நானும் வர்றேன் : பேருந்தில் ஏற முயன்ற காட்டு யானை ..வைரலாகும் வீடியோ
வனவிலங்குகளில் ஒன்றான காட்டு யானை சில சமயங்களில் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதும் உண்டு. சில சமயங்களில் கோபம் வந்து விட்டால் ஆக்ரோஷமுடன் நடந்து கொள்வதும் உண்டு.
வழி மறித்த காட்டு யானை
இந்த நிலையில், பேருந்தில் சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து காட்டு யானை ஒன்று பஸ்சில் ஏற முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை உமாசங்கர் சிங் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், டாடா பஸ்சின் கதவு மிக சிறிய அளவில் உள்ளது. அதனால், யானையால் அதில் ஏற முடியவில்லை என தலைப்பிட்டு உள்ளார். இதனை 1.27 லட்சம் முறை பார்த்துள்ளனர். 3 ஆயிரத்து 400-க்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். அந்த வீடியோவின் தொடக்கத்தில் பஸ் ஒன்றை காட்டு யானை தாக்க முற்படும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
வைரலாகும் வீடியோ
தனது தும்பிக்கையால் சாலையில் சென்ற பஸ்சை அது தாக்க முற்படுகிறது. பஸ் மெதுவாக செல்கிறது. கதவை நோக்கி சென்ற யானை அதனை முட்டுகிறது. இதனால், யானை கதவை திறக்க முயல்வது போல் தோன்றுகிறது.
टाटा की बस के दरवाज़े इतने छोटे हैं कि ‘बड़ी सवारी’ चढ़ ही नहीं पायी! ?
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) October 22, 2022
pic.twitter.com/jqcKp3W9Km
எனினும், வீடியோ முடிவில் மெதுவாக நகர்ந்து சென்ற பஸ்சை விட்டு, விட்டு யாருக்கும் தீங்கு எதுவும் செய்யாமல் அந்த காட்டு யானை விலகி செல்கிறது.