மறைந்த பாகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை - நெகிழ்ச்சி வீடியோ
elephant
bagan death
pay respect
By Anupriyamkumaresan
கேரளாவில் மறைந்த பாகனுக்கு, யானை ஒன்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாப்பன் ஓமனச்சேட்டன், உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த பாகனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், அவரது பராமரிப்பில் இருந்த கஜவீரன் பிரம்மதத்தன் என்ற யானையும் பங்கேற்றது. 25 ஆண்டுகள் தன்னுடன் பழகிய பாகனின் மறைவால் வாடிய அந்த யானை, நீண்ட நேரமாக ஓமனச்சேட்டனின் உடலை பார்த்தபடி கண்கலங்கியது.
பிரிவதற்கு மனமில்லாதபோதும், தும்பிக்கையை உயர்த்தி இறுதி மரியாதை செலுத்தியபடி கண்ணீடன் பிரியாவிடை கொடுத்தது கஜவீரன் யானை.