பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு!
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தலாம், 234 தொகுதிகளிலும் 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் இரண்டு பேர் என மொத்தம் 3998 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் போட்டியிடுகின்றனர்.

மக்கள் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.